திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை ஐந்து ரூபாய், டீசல் விலை நான்கு ரூபாயும் குறைக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் எப்போது தூக்கத்தில் இருந்து விழிக்க போகிறீர்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் இரண்டு ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 28 மாதங்களில் நமது மத்திய அரசு பெட்ரோல் விலையில் 15 ரூபாய் மற்றும் டீசல் விலையில் 18 ரூபாய் குறைத்துள்ளது என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்