நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஒருபுறம் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்றொருபுறம் மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் எடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக, ஓபிஎஸ் அணி, அமமுக கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கி இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார்.