தமிழறிஞர் குருசாமி சித்தர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தேவநேய பாவாணரின் சிஷ்யரான இவர் சேர, சோழ, பாண்டியன் மன்னர்களின் வரலாறு, நீர் மேலாண்மை மற்றும் சங்க இலக்கியம், மருதத் திணை பாடல்கள் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பழனம் என்றால் வயல், வயல் சூழ்ந்த ஊருக்கு பழனி என்று பெயரிடப்பட்டதாக முதன் முதலில் தமிழ் சமூகத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தவர் இவர்தான். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்