பஞ்சாபில், பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய உடனேயே 7 வயது சிறுவனை அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி தூக்கியுச் செல்லும் பயங்கரமான சம்பவம் சிசிடிவியில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மனதை பதறவைக்கும் இந்த காட்சி, பள்ளி பேருந்து நிறுத்தங்கள் அருகில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது.
பஞ்சாப் பாட்டியாலாவில் உள்ள குறுகிய கிராமப்புற சாலையில் நடந்த இந்த சம்பவத்தின் காட்சியை இணையத்தில் பகிர்ந்துள்ளது. வீட்டிற்கு மாணவர்களை இறக்குவதற்காக ஒரு பள்ளி பேருந்து சாலையின் ஓரத்தில் நிற்கும் தருணத்தில், சிறுவன் அமைதியாக இறங்கி சாலையின் பக்கமாக நடந்து செல்கிறான்.
स्कूल बस से उतरते ही… एक छोटे बच्चे के साथ रूह कंपाने वाला हादसा! | Accident News | Punjab | CCTV#Punjab #CCTV #Accident #RoadAccidentnews #Patiala #SchoolBus #PunjabKesariTv pic.twitter.com/zbO0NiNzZR
— Punjab Kesari (@punjabkesari) December 4, 2025
இதற்கிடையில், பேருந்து எதிரே வரும் வாகனங்களின் பார்வையை மறைத்த நிலையில், சில விநாடிகளில் பேருந்தின் பின்னால் இருந்து அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் பாய்ந்து வருகிறது. சிறுவன் எதிர்வினையாற்றுவதற்கும் நேரமில்லாமல், பைக் நேரடியாக அவரை மோதுகிறது. மோதி தூக்கி எறியப்பட்ட சிறுவன் சில அடி தூரம் சென்று விழுகிறார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், மோட்டார் சைக்கிள் முன்னால் சறுக்கி விழுவதும், அருகிலிருந்த மக்கள் பயத்தில் ஓடிவந்து குழந்தையை உதவ முயலும் காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன.
காட்சி வெளிப்படுத்தும் இன்னொரு கவலைக்குரிய அம்சம், அந்தச் சாலையில் எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், வாகனங்கள் நிறுத்தும் ஒதுக்கிடங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் எதுவுமில்லாதது.
மேலும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, பள்ளி மாணவர்கள் தினமும் பயணிக்கும் பாதைகளில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டுமென சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.
