தியான்ஜின் நகரத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில், சீனாவால் உருவாக்கப்பட்ட ஹ்யூமனாய்டு ரோபோட் அனைவரது கவனத்தையும் திருப்பியது. பெண் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை நுண்ணறிவு ரோபோட், ஆங்கிலம், சீனம் மற்றும் ரஷிய மொழிகளில் சரளமாக (fluently) பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
#EXCLUSIVE | Robots take over reception duty! Meet Xiao He, the humanoid robot who is assigned to assist media personnel at SCO Summit in Tianjin@SwetaSinghAT speaks to her. Watch the conversation.#IndiaTodayAtSCO pic.twitter.com/3HjRbftyIL
— IndiaToday (@IndiaToday) August 31, 2025
“>
பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிக நுணுக்கமாக பதிலளித்த அந்த ரோபோட், “நான் ஒரு AI சேவை ரோபோட். நாடுகள் மற்றும் அரசியல் குறித்து தனிப்பட்ட கருத்து கொடுக்க முடியாது” என்று தன்னம்பிக்கையுடன் கூறியது.
அதிகம் பேசப்பட்ட கேள்விகளில் ஒன்றான “இந்தியாவை பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு ரோபோட் நேரடியாக பதிலளிக்காமல், மாநாட்டின் முக்கிய அம்சங்களை விளக்கி, சுமூகமாக சூழலை சமாளித்தது. மேலும் “இன்று நான் சிறந்த செயல்திறனுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். கேள்வி கேட்டதற்காக நன்றி” என பதில் அளித்தது.
அதிகமாக செயல்படும் திறனுடன் உள்ளேன் என பதிலளித்த அந்த ரோபோட், SCO மாநாட்டின் முக்கிய அம்சங்களை விளக்கியதோடு, பக்க நிகழ்வுகள் குறித்தும் கூறியது. இந்த ரோபோட் நேர்காணல்களுக்கு பதிலளித்த விதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை நேரில் காண்பித்த இந்த சம்பவம், மாநாட்டின் முக்கிய அம்சமாக காட்சியளித்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதை ‘தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி’ எனக் கூறி பாராட்டுகின்றனர்.
BREAKING 🚨: The humanoid AI robot named Xiao He is actively assisting media personnel at the 2025 Shanghai Cooperation Organisation (SCO) Summit in Tianjin, China. pic.twitter.com/xUIjEphxkX
— vimal ojha (@vimalojha7) August 31, 2025
“>
