ஆன்லைன் உலகில் வெறுப்பு, கிண்டல் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் அடிக்கடி தலைதூக்கி நிற்கும் நிலையில், ஜாம்பியாவில் இருந்து வந்துள்ள வழக்கறிஞர் நஒமி பிலுலா தன்னம்பிக்கை மற்றும் சுய அன்பின் வலுவான குரலாக மாறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், இயற்கை அழகோடு புன்னகை மலர்ந்து எடுக்கப்பட்ட தனது செல்ஃபியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நஒமி, “Happy Monday! என் இயற்கை முடி அழகாக, என் தோல் பிரகாசமாக உள்ளது. அழகாக இருப்பதை கொண்டாடுவோம்” என எழுதியிருந்தார். ஆனால், இதற்குப் பதிலாக பலர் அவளை கேலி செய்து, தோற்றத்தை குறைசொல்லும் வகையில் மோசமான கருத்துகளை பதிவிட்டனர்.
View this post on Instagram
“>
இதனால் முதலில் மன உளைச்சலுக்கு ஆளான நஒமி, ஒரு கட்டத்தில் பதிவுகளை நீக்கியிருந்தார். பின்னர் தனது சகோதரியுடன் பேசியதில், “மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீ கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நீ எப்படி பதிலளிக்கிறாய் என்பது உன்னுள் இருக்கும் வலிமையைக் காட்டுகிறது” என்ற ஆலோசனையால் தன்னம்பிக்கையை மீட்டுக்கொண்டார்.
View this post on Instagram
“>
தனது தோற்றத்தைப் பற்றிய குறைகள் மீது நீண்ட காலமாக அச்சத்துடன் இருந்ததாக அவர் கூறியிருந்தாலும், இறுதியில் தனது தனித்தன்மையை ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மூக்கைப் பற்றி அதிகம் பேசப்பட்டதைப்பற்றி நஒமி, “இது என் தந்தையின் மூக்கு. அது என்னை அவரோடு இணைக்கிறது. அதை மாற்ற விரும்புவதற்கு அர்த்தமே இல்லை” எனக் கூறினார். “ஒரு நாள் திடீரென கண்ணாடியில் பார்த்து ‘ஆம், நான் அழகாக இருக்கிறேன்’ என்று சொல்லவில்லை.
View this post on Instagram
“>
ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு எனது தோற்றம் பிடிக்கத் தொடங்கியது. அதை யாராலும் பறிக்க முடியாது” என்று அவர் உறுதியுடன் கூறியிருந்தார். இந்த நேர்மையான பதில்கள் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலருக்கும் உந்துசக்தியாக மாறியுள்ளன.
View this post on Instagram
“>
