அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் சாப்பிங் மாலில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிகெர்ரா ஹிக்ஸ் (Tikerra Hicks) என்ற பெண் ஊழியர் கழிவறையை விட்டு வெளியே வந்ததும், அவரை குறிவைத்து ஒரு பெண்கள் குழு கடுமையாக தாக்கியது.
அந்த வீடியோவில், ஹிக்ஸ் தரையில் விழுந்த நிலையில், அந்த பெண்கள் சாய்ந்தவாறே கால் வைத்துமிதித்து , முகத்தில் அடித்து, குத்திய காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. பின்னணியில் ஒருவர் “Where is he, b**h?!” என கூச்சலிடும் குரலும் கேட்கப்படுகிறது. மற்ற பெண் ஊழியர்கள் சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
Meanwhile, at an Indianapolis Walmart, a brawl breaks out between employee and a group of women
Lost it when one lady threw punches while holding a baby pic.twitter.com/fSiVvHE5JE
— RT (@RT_com) September 1, 2025
“>
இந்த வீடியோவை ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் சிரித்தபடியே அந்த இடத்தின் விவரங்களைச் சொல்லி செல்ஃபி போடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சம்பவத்துக்கு முன், ஹிக்ஸ் மீது, “நண்பனின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீயே காரணம்” என கூறி சிலர் குற்றம்சாட்டியதாக தெரியவந்துள்ளது. ஆனால் ஹிக்ஸ் அதில் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.. இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
