குஜராத் மாநிலம் சூரத்தின் சச்சின் பகுதியில், போதிய அனுபவமின்றி பாம்பைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவரைப் பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் பகுதியில் உள்ள பர்வாத் சால் என்ற குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பைப் பிடிக்க முயன்ற ஜஷேஷ் பர்வாத் என்ற இளைஞர், அதனை வைத்து வித்தை காட்ட முற்பட்டபோது கோபமடைந்த பாம்பு அவரது காலில் கடித்தது.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், வனவிலங்குகளுடன் ஆபத்தான முறையில் விளையாட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞரைத் தீண்டியது விஷமற்ற பாம்பு என்பதால், அவர் உயிர் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

இதனால் சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காகவும், வேடிக்கைக்காகவும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாம்புகளுடன் விளையாடுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால், பொதுமக்கள் சுயமாகச் செயல்படாமல் உடனடியாக வனத்துறை அல்லது மீட்புக் குழுவினரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.