பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஹேக் சஹால். இவர் பாலிவுட்டில் வான்டட், மெயின் ஆவுர் மிசஸ் கன்னா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதோடு இந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது பிரபல நாகின் தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் நாகினி 6 தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை‌ மஹேக் சஹால் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நிமோனியா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 நாட்கள் வரை ஐசியுவில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதோடு வெண்டிலேட்டரிலும் வைக்கப்பட்டுள்ளார். தற்போது உடல் நலம் தேறி வரும் நடிகை மஹேக் சஹால் இது பற்றி கூறும் போது, என் நெஞ்சில் கத்தியை வைத்து குத்துவது போன்று வலி இருக்கிறது. இருமும் போதும் வலிக்கிறது. ஆக்சிஜன் ன் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. ஆனால் தற்போது என்னுடைய உடல்நலம் தேறி வருகிறது. மேலும் 8 நாட்களாக நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் நடிகை மஹேக் சஹால் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.