அஜித் ரசிகர்களை வாரிசு படம் பார்க்க வருமாறு விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகின்றது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆகின்றது. அஜித்-விஜய் இருவரின் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகின்றது.
இந்த நிலையில் அனைவரையும் ஆச்சரியமடைய வைக்கும் விதமாக பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் பட்டுக்கோட்டையில் அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு திரைப்படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். இது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.