தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு திடீரென விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

மலேசியா லங்காவி தீவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.