நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், நம்பர் 1 நம்பர் 2 நம்பர் 3 இது எல்லாமே ஒரு விளையாட்டு தான். ரசிகர்கள் யாரை அதிகம் விரும்புகின்றார்களோ அவர்களை எல்லாம் சூப்பர் ஸ்டார் என்று கூறுவார்கள். யாருக்கு ரசிகர்கள் அதிகமாகின்றார்களோ அவர்களே சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார்கள். 25ஆம் தேதி  இது பற்றி நாம் விரிவாக பேசலாம். இன்னைக்கு என்னை விட்டு விடுங்கள் என செய்தியாளர்களிடம் கூறுகின்றார்.

மேலும் பேசிய அவர், இன்று நான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன். ஆகையால் இன்று இதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் யாரையும் அடுத்த CM என கூறவில்லை PM என்று கூறவில்லை. இவங்க தான் சூப்பர் ஸ்டார்… இவங்க மட்டும் தான் சூப்பர் ஸ்டார் அப்படியும் நான் சொல்லவில்லை. இதை புரிந்து கொள்ளுங்கள். தெலுங்கில் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் என நிறைய இருக்கின்றார்கள் என கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்று விட்டார்.