பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்டு செய்யும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இந்த படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் 2வது பாடலான “நாடோடி மன்னன்” நாளை 17-ஆம் தேதி வெளியாகுமென படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. அதனை தொடர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அடிப்படையில் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் ரிலீஸ் தேதியை படக்குழு குறிப்பிட்டுள்ளது.