விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் சென்ற 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த இரு திரைப்படங்களும் விரைவில் 100 கோடி வசூலை எட்ட உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரு திரைப்படங்களும் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றதோ அதை பொறுத்து தான் படத்தின் லாபம் என்ன என்பது தெரியவரும். இதை நாம் பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும்.

அண்மையில் பட குழு துணிவு மற்றும் வாரிசு புதிய போஸ்டர்களை வெளியிட்டது. அதில் வாரிசு போஸ்டரில் பொங்கல் வின்னர் எனவும் துணிவு போஸ்டரில் ரியல் வின்னர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் தான் பொங்கல் வின்னர் என சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வந்தார்கள். இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களையும் தமிழில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் பொங்கல் வின்னர் ரியல் வின்னர் என்ற வாசகத்தை நீக்கி இரண்டு திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் தான். திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என பதிவிட்டு இருக்கின்றது.