ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “துணிவு” படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படம் ரூபாய்.100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் துணிவு படக்குழு பொங்கலை முன்னிட்டு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் “உலகளாவிய மிகப் பெரும் வெற்றி” என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.