வாரிசு திரைப்படத்தின் வசூலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி சென்ற ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

படம் வெளியான 4 நாட்களில் 100 கோடியை வாரிசு வசூல் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் 400 கோடியை வாரிசு வசூல் செய்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் படம் ரிலீசுக்கு முன்பாகவே 300 கோடி வசூல் செய்தது. தற்போது மொத்தமாக சேர்த்து 400 கோடியை வசூல் செய்து விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

இத்திரைப்படத்தின் ஆடியோ, டிஜிட்டல், சாட்டிலைட், வினியோக உரிமம் எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ. 300 கோடி வந்திருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமம் ரூ. 10 கோடி, டிஜிட்டல் உரிமம் ரூ. 75 கோடி, சாட்டிலைட் உரிமம் ரூ. 57 கோடி பெற்றிருக்கிறார்களாம் என ரசிகர்கள் ஆதாரத்துடன் கொண்டாடி வருகின்றார்கள்.