சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக ‘புனித் சூப்பர் ஸ்டார்’ என்ற இன்ஃப்ளூயன்ஸர் செய்துள்ள அருவருப்பான செயல் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அசுத்தமான சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி குளிக்கும் அவர், அங்கேயே அமர்ந்து ஜூஸ் குடிக்கிறார். அந்த ஜூஸ் பாட்டிலை அதே சாக்கடைத் தண்ணீருக்குள் முக்கி எடுத்து மீண்டும் குடிக்க முயல்வது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “வெறும் வியூஸ்களுக்காக இப்படியா அசிங்கமாக நடந்துகொள்வது?” என அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இது நகைச்சுவை அல்ல, ஒருவிதமான மனநோய் என்றும், இதுபோன்ற ஆபத்தான செயல்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘நாலா சூப்பர் ஸ்டார்’ என கிண்டல் செய்யப்படும் இந்த வீடியோ, தற்போது சோஷியல் மீடியாவில் விவாதப் பொருளாகியுள்ளது.
