மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்யாங் (Qinyang) பகுதியில் பேருந்து ஓட்டிச் செல்லும் பெண் ஓட்டுநர் ஒருவர், சாலையில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவர் பேருந்தைப் பிடிக்க சிரமப்படுவதைக் கவனித்தார். அவரைத் தாண்டி பேருந்து சென்ற போதிலும், உடனடியாகப் பேருந்தை பின்னோக்கி (Reverse) எடுத்து வந்து, அந்தப் பயணி ஏறும் வரை மிகுந்த பொறுமையுடன் காத்திருந்தார்.
A female bus driver in Qinyang, #Henan, noticed a passenger with mobility difficulties and immediately reversed her car to wait patiently for her.
Small acts of #kindness spread great warmth pic.twitter.com/5iMQgHe6qs
— Erica ❤️🇺🇸 (@eric_hz143) April 9, 2026
“>
அந்தப் பெண் ஓட்டுநரின் இந்தச் சிறு அன்புச் செயல் அங்கிருந்தவர்களின் மனதை உருக்கியதுடன், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உலகெங்கும் உள்ள மக்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
