சின்னத்திரை காதல் ஜோடிகளில் தற்போது தம்பதிகளாக இருப்பவர்கள் தான் ஸ்ரேயா சித்து. இவர்கள் திருமணம் என்ற சீரியலில் ஜோடியாக நடித்த சின்னத்திரைக்கு அறிமுகமாகினர். இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் சீரியல் கொரோனா காலப்பகுதியில் சென்று கொண்டிருந்ததால் விரைவில் முடிக்கப்பட்டது. இந்த சீரியலின் மூலம் காதல் ஏற்பட்டதால் இரு வீட்டார் சம்பந்தத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பது போன்று எந்த ஒரு கதையும் வரவில்லை என்பதால் இருவரும் தனித்தனி ஜோடிகளுடன் தற்போது நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சித்து மற்றும் ஸ்ரேயா தங்களது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதால் அடிக்கடி ரில்ஸ் செய்து அதனை பதிவிடுவது வழக்கம். அதன்படி குத்து பாடலுக்கு வேஷ்டியுடன் ஸ்ரேயாவும் சித்துவும் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/C1RB5ZmUQQ0