100, 200 கோடி பிரம்மாண்ட செலவில் படங்கள் எடுத்து அதன் மூலம் வெற்றி காண்பதை விட சிறிய பட்ஜெட்டில் இருந்தாலும் கூட கதைக்களம் சிறப்பாக இருந்தால் அதுவே தமிழ் சினிமாவை வளர்த்தெடுக்கும் என பல பிரபல இயக்குனர்கள் தொடர்ச்சியாக தங்களது கருத்துக்களை இது குறித்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான சினிமாக்களே சாமானிய மக்களை எளிதாக சென்றடையும் எனவும் அப்படியான படங்களை கொண்டாட வேண்டும் எனவும் நடிகரும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையும் ஆன கஜராஜ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், சிறிய படங்கள் வந்தால் தான் சினிமா துறை நன்றாக இருக்கும். நல்ல கதைக்களம் உள்ள படங்களுக்கு ஆதரவு கொடுங்கள். என் மகன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். என் மகனும் அப்படிப்பட்ட சிறிய படங்களை எடுத்து தான் தற்போது உயர்ந்திருப்பதாக கூறிய அவர் , சிறிய படங்களே சினிமாத்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகமாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.