கன்னியாகுமரி மாவட்டம் காணி மடத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வான வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவை காண அதே ஊரைச் சேர்ந்த 48 வயது பெண்ணும் சென்றுள்ளார். இந்நிலையில் வானத்தை நோக்கி விடப்பட்ட ஒரு பட்டாசு திடீரென மரத்தின் மீது விழுந்தது.

இந்த பட்டாசு கீழே நின்று கொண்டிருந்த 48 வயது பெண்ணின் தலையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் அஞ்சு கிராமம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.