தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு சென்று சிகரெட் மற்றும் உனக்கு மிட்டாய் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி கடைக்கு சென்ற சிறுவன் சிகரெட் மற்றும் மிட்டாய் வாங்கி விட்டு  மீதி பணத்தை வாலிபரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு செல்ல முயன்ற சிறுவனுக்கு திடீரென வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடமிருந்து தப்பி ஓடிய சிறுவன் தன் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.