உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியின் கங்கநஹர் பகுதியில் மனிதாபிமானத்தை உலுக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், பகவான்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தன்னுடன் வேலை பார்த்த 16 வயது சிறுமியுடன் நட்பு வைத்துள்ளார்.

இந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், அந்தச் சிறுமியைச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூர்க்கிக்கு அழைத்து வந்துள்ளார்.

வழியில் அந்தச் சிறுமிக்குத் தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். சிறுமி மயக்கமடைந்ததைக் கண்ட கார்த்திக், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பின்னர் அந்தச் சிறுமியை நெடுஞ்சாலை ஓரத்தில் கேட்பாரற்று வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், கார்த்திக் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.