ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதியின் 16 வயது மகள், பள்ளி படிப்பை நிறுத்தி ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. சம்பவத்தின் நாளன்று சிறுமியின் பெற்றோர் உறவினர் இறப்பு காரணமாக வெளியூர் சென்றிருந்தனர்.
அன்றைய தினம் வழக்கம்போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த சிறுமி சுனிலுடன் பைக்கில் பர்கூர் மலைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் போதே வழியில் விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமி படுகாயமடைந்து சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அந்தியூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தினர். இந்த தகவல் பெற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
