சென்னை திருமங்கலம் பகுதியில் வசிக்கும் 24 வயது இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தங்கையான 16 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நைனா முகம்மது என்ற ஜிம் பயிற்சியாளர் பழக்கமானார். ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியது. அடிக்கடி ஆசை வார்த்தைகள் கூறி எனது தங்கைக்கு நைனா முகமது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான நைனா முகம்மதுவை தேடி வந்தனர். நேற்று சிங்காரப்பேட்டை பகுதியில் பதிந்திருந்த நைனா முகம்மதுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.