பெங்களூருவில் ஐடி ஊழியரான அதுல் சுபாஷ் என்பவர் மனைவியின் டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதே போன்று தலைமை காவலர் ஒருவரும் பெங்களூரில் மனைவியின் டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அதே போன்று அரங்கேறியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் பால்ராஜ் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு உள்ளூர் கிரிக்கெட் வீரர். இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக குமாரி என்ற பெண்ணை இரண்டாவது ஆக திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 2 தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு குமாரிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ள உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி பாலராஜ் தட்டி கேட்ட நிலையில் அடிக்கடி குமாரி அவருடன் சண்டை போட்டுள்ளார்.
அதோடு தன் கணவருடன் வாழ பிடிக்காமல் அவர் தனியாக பிரிந்து சென்று விட்ட நிலையில் பாலராஜ் வேதனையில் தவித்து வந்துள்ளார். இந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அவர் எழுதிய ஒரு தற்கொலை கடிதம் சிக்கியது. அதில் தன்னுடைய மனைவியின் தொல்லை தாங்காமலும் அவர் கள்ள உறவில் இருந்ததாலும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. அதோடு தான் ஒரு உள்ளூர் கிரிக்கெட் வீரர் என்பதால் நான் வென்ற பரிசுகள் மற்றும் கோப்பைகள் ஆகியவற்றை தனக்கு இறுதி சடங்கு செய்யும்போது வைக்க வேண்டும் என்றும் அவர் எழுதியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
