மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் காதல் விவகாரம் காரணமாக ஒரு மனைவி தனது கணவரைக் கொன்ற அதிர்ச்சிக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் மக்சுதன்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சாரா பாரி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது 35 வயதான கைலாஷ் பஞ்சாரா என்பவர் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்படும்போது அவரது கழுத்தில் கயிறு அடையாளங்கள் இருந்ததை உறவினர்கள் கவனித்தனர். இது குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்ததையடுத்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு கைலாஷ் பஞ்சாராவின் மனைவி சம்போ பாயின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாகத் தோன்றின. தொடர்ந்து நடந்த விசாரணையில், சம்போ பாய் தனது கணவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், அவர் தன்னை அடித்து வீட்டில் தகராறு செய்தார் என கூறியுள்ளார்.
மேலும், உக்காவாட் பகுதியில் வசிக்கும் பிரதீப் பார்கவ் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், இருவருக்கும் உடல் ரீதியான உறவுகள் இருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவ நாளன்று கைலாஷ் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார். உடல்நிலை சரியில்லை எனச் சொன்ன மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையின் போது கைலாஷ், சம்போ பாயை கயிற்றால் நெரிக்க முயன்றபோது, அவர் அதைத் தடுத்து, பின்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கணவரை பின்னால் இருந்து கயிற்றால் நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கொலைக்குப் பிறகு சம்போ பாய், பிரதீப்பிடம் அனைத்தையும் தெரிவித்தார். உடலை உடனடியாக தகனம் செய்யவும், யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றும் பிரதீப் அறிவுறுத்தியுள்ளார். சம்போ பாய், கைலாஷ் இயற்கையாகவே இறந்ததாக அனைவருக்கும் கூறி, பிரேத பரிசோதனை இல்லாமல் இறுதிச் சடங்குகள் செய்து விட்டார்.
மேலும் இந்த சம்பவம் சந்தேகத்திற்கிடமாக இருக்க, கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அங்கு சம்போ பாய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் சம்போ பாயையும், அவரது காதலர் பிரதீப்பையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
