இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பார்க்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பெண்ணுடன் வந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின் இந்தக் காட்சி, அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுடனான விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில் வைரலாகி வருகிறது. பல மாதங்களாக சமூக ஊடகங்களில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருப்பது ஒரு வாரத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவருடைய முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் “பெண்களை குறை கூறுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். அதாவது சஹாலும், தனஸ்ரீயும் விவாகரத்து செய்த போது தனஸ்ரீ கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்” என்பது குறிப்பிடத்தக்கது.
