பிரபல பாலிவுட் நடிகரும், சிட்டிங் எம்.பி.,யுமான சன்னி தியோலுக்கு பாஜக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான 8வது பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் தினேஷ் சிங் பாபுவுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது.

அந்த தொகுதியில் பாஜக சார்பில் சன்னி தியோல் தற்போது எம்.பி.யாக உள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சன்னி தியோல் சில நாட்களுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.