வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். தனுஷ்கோடி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த டிரைவர் உட்பட 16 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.