சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அதிலும் ஐஸ்கிரீம் வாங்க செல்லும்போது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வேடிக்கை காட்டி சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்கிரீமை கொடுக்கும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் கடைக்கு முன்பு வந்த வாலிபர் துப்பாக்கியால் விளையாட்டாக சுடுகிறார்.
ஒரு நிமிடம் திகைத்துப் போன ஐஸ்கிரீம் விற்பனையாளர் கோபத்தில் அந்த வாலிபரை அடிக்க பின்னாலே ஓடுகிறார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ இன்டர்நெட் ரீல்ஸ் என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— GL (@GL3137106585992) August 13, 2025
