தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர்.  தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல் முயற்சியில் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

தன்னுடைய முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக மிக பிரம்மாண்டமாக விஜய் நடத்தி முடித்த நிலையில் இன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பேசிய விஜய், ஒருமுறை சிங்கம் கர்ஜித்தா அந்த சத்தம் எட்டு கிலோமீட்டருக்கு சும்மா அதிரும் அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும். சும்மா வேடிக்கை பாக்குறதுக்கு வெளியே வராது.

வேட்டையில் கூட உயிரோடு இருக்கும், தன்னைவிட பெரிய உருவத்தில் இருக்கும் உயிரினங்களை தான் குறி வைத்து தாக்கும், ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை கெட்டுப் போனதை சிங்கம் தொட்டு கூட பார்க்காது.

அப்படிப்பட்ட அந்த சிங்கம் அவ்வளவு ஈஸியா எதையும் தொடாது. தொட்டால் விடாது. சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியா இருக்கவும் தெரியும். அப்படி தனியா வரணும்னு நினைச்சாலும் அஞ்சாமல் அலட்டிக்காம சும்மா கெத்தா தனியா வந்து அத்தனை பேருக்கும் தண்ணி காட்டும். எப்பவும் சிங்கம் தன்னுடைய தனி தன்மையை இழக்காது. சிங்கம் எப்பவும் சிங்கம் தான் என கூறியுள்ளார். வீட்டிலிருந்தே  அரசியல் செய்கிறார் என அரசியல் தலைவர்கள் கூறிய விமரனத்திற்கு விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.