பெங்களூருவில் தன்னை உதாசீனப்படுத்திய காதலனை, காதலி ஒருவரே மிகவும் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை சரியாகக் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்ற காதலனுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுப்பதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்த அந்தப் பெண், ‘வெஸ்டர்ன் ஸ்டைலில்’ உடலுறவு கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய காதலனை நாற்காலியில் அமரவைத்து, அவரது கை, கால்களைக் கட்டி, கண்களையும் துணியால் மறைத்துள்ளார். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, அவரது ஆடைகளைக் களைந்து உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த மொத்த கொடூரத்தையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்திருந்தது விசாரணையில் அம்பலமாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.