சீனாவின் அதிநவீன ‘மேக்லேவ்’ ரக ரயில், மணிக்கு 700 கி.மீ வேகத்தில் மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புதிய ரயிலானது தண்டவாளத்தைத் தொடாமல், காந்த விசையின் உதவியால் காற்றில் மிதந்தபடி பயணிக்கிறது.

இதன் வேகம் எந்தளவுக்கு இருக்கிறது என்றால், கேமராக்களுடன் காத்திருக்கும் மக்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வெள்ளி நிறக் கோடு போல ரயில் மறைந்துவிடுவதைக் கண்டு மிரண்டு போயுள்ளனர். சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறைக் கழகத்தின் 10 ஆண்டு கால உழைப்பில் உருவான இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<a href=”http://

“>
வழக்கமான ரயில்கள் போல சக்கரம் மற்றும் தண்டவாளங்களுக்கு இடையே உராய்வு இல்லாததால், இந்த ரயில் எவ்வித சத்தமும் இன்றி சீறிப்பாய்கிறது. இது ஒரு அறிவியல் புனைக்கதை படத்தில் வரும் வாகனத்தைப் போலவே காட்சியளிக்கிறது. வெற்றிடக் குழாய்களுக்குள் ரயில்களை இயக்கும் ‘ஹைப்பர்லூப்’ தொழில்நுட்பத்தை நோக்கிய சீனாவின் மிகப்பெரிய பாய்ச்சலாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ராக்கெட் ஏவுதல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.