தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதே அவர் இந்த படத்தோடு சினிமாவிலிருந்து முழுமையாக விலகுகிறார்.

இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் 2026 தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு இலங்கை முன்னாள் அதிபர் மகேந்திர ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது சினிமா விஜயை மிகவும் மிஸ் செய்யும் என்று கூறிய அவர் அவர் தனது பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு தற்போது புதிய பயணத்தை தொடங்குகிறார் என்றார். மேலும் விஜயின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.