இந்தியாவின் கேரள மாநிலத்தவர்களுக்காக வெளிநாடுகளில் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பிரவாசி ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. குறைந்த நடுத்தர வருமான வரம்பை கொண்டவர்கள் இதன் மூலம் பயனடையலாம். கேரளா பிரவாசி நல வாரியத்தின் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் குறைந்தபட்சம் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலங்களில் பணியாற்றியவர்களும் 19 முதல் 60 வயதிற்கு உட்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வசிக்க கூடியவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும்.

ஒரு வருடத்திற்கு மேல் பங்களிக்காத பட்சத்தில் உறுப்பினர்களின் சேர்க்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மூலமாக பயனடைய முடியாது. இதில் பயனடைய கேரள வாசிகள் கேரளா பிரவாசி நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் 2000 ரூபாய் பயனாளிகளின் 60 வயதை எட்டும் போது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.