இந்தியாவில் மக்கள் பலரும் எதிர்காலத்தில் பணத் தேவையை சமாளிக்க அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு கணக்குகளை வங்கிகளில் தொடங்குகின்றனர். பல வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர வட்டி விகிதங்களை அதிகரித்தாலும் யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி கூடுதல் அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் அதிகரிப்பது போன்று தான். அதாவது 7.50 சதவீத வட்டி வழங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வட்டி பலன்களை பெற குறைந்தது 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் 5 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

மேலும் சேமிப்பு கணக்கில் 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணத்தை வைத்திருந்தால் அதற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த வங்கி ஒரு லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆறு சதவீதம் வட்டியும், ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஏழு சதவீதம் மட்டும் வழங்குகின்றது. மேலும் 5 கோடிக்கு மேல் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.