இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். பல தேவைகளுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்த எதிர்பார்க்கலாம். அதாவது வங்கி கணக்கை வைத்திருக்கும் நபர் உயிருடன் இருக்கும் வரை மட்டுமே அந்த தொகை அவருக்கு சொந்தமானதாக இருக்கும். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்தாருக்கு வங்கித் தொகை செல்வதில் பல சிக்கல்கள் ஏற்படும். அதாவது வங்கி கணக்கை திறக்கும்போது நாமினி விவரங்களை முறையாக பதிவிட வேண்டும். நாமினியை பதிவு செய்யாவிட்டால் மரணத்திற்கு பிறகு அந்த கணக்கில் இருந்து தொகையை எடுக்க முடியாது.

இந்தத் தொகை முழுவதும் கோரப்படாத தொகையாக கருதப்படும். வங்கிகள் அனைத்தும் கேஒய்சி சரிபார்ப்பை அடிக்கடி செய்து வாடிக்கையாளர்களிடம் கணக்கை முறையாக பராமரிக்க தெரிவிக்க வேண்டும். குறிப்பாக உங்களுடைய வங்கி கணக்குகளை ஒழுங்குபடுத்தி தேவையற்ற கணக்குகளை முறையாக மூடி விடவும். எந்த வகையான திட்டமாக இருந்தாலும் அது தொடர்பான ஆவணங்களை நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் ஆவணங்களின் விவரங்களை குடும்பத்தினர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் நமக்கு பிறகு அந்த தொகையை குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.