இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி யான sbi வங்கியில் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது SBI Green Rupee Term Deposit என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பசுமை நிதி சூழலை மேம்படுத்த பசுமை செயல்பாடுகள் மற்றும் அது குறித்த ப்ராஜெக்ட்களுக்கு இந்த திட்டம் மூலமாக நிதி வழங்கப்படும். இந்திய தனி நபர்கள் மற்றும் தனிநபர் அல்லாத வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து டெபாசிட் செய்யலாம்.

இந்த திட்டம் தற்போது வங்கியின் கிளை நெட்வொர்க் மூலமாக கிடைக்கிறது. கூடிய விரைவில் யோனோ மற்றும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகள் போன்ற டிஜிட்டல் சேனல்கள் மூலம் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் இதில் 6.15 முதல் 7.40 சதவீதம் வரை வட்டி விகிதமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.