இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று கவலைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் 15 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை பெறுவதற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் தங்களுடைய வங்கி கணக்கியின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த படியை முடிக்காதவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படாது எனவும் ஆதார் பதிவு மற்றும் நில சரிபார்ப்பு செய்யப்படாத விவசாயிகளும் விரைந்து பணியை முடிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அனைத்து சரிபார்ப்பு பணிகளும் முடிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.