இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் இது வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் PIB FACT check அமைப்பு இதற்கு பதில் அளித்துள்ளது. அதாவது இது முற்றிலும் போலியான தகவல் என்றும் இது போல மத்திய அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் தெளிவு படுத்தி உள்ளது.