அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தற்போது பொதுமக்கள் ராமர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல சிறப்புகள் கொண்ட அயோத்தி ராமர் கோவில் குறித்து பல தகவல்கள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதன்படி அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலை 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறையில் இருந்து சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரில் உள்ள தேசிய ராக் மெக்கானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் நீடித்த உறுதி தன்மை கொண்ட பாறை என்பதால் காலநிலை மாறுபாட்டை தாங்குவதோடு குறைந்தபட்ச பராமரிப்புடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.