நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொளிக்கும் என்பதால் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற உள்ளது.

அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 18,000 ரூபாயிலிருந்து 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது குறித்து அறிவிப்பு இதில் வெளியாகும் என தெரிகிறது. இதனால் குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் அதிகரிக்கும். சம்பளம் உயர்ந்தால் அகலவிலை படியும் உயரும் என தெரிகிறது. இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.