இந்தியாவில் மக்கள் பலரும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பணப்பரிவர்த்தனைக்காக அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட வங்கி கணக்கிலிருந்து அப்படியே யு பி ஐ மூலம் பணத்தை மாற்றுகின்றனர். மேலும் இதன் மூலமாக மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தற்போது வரை மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கூகுள் பே தன்னுடைய பிளாட்பார்ம் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது மூன்று ரூபாய் வசதி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கூகுள் பே மூலம் ப்ரீபெய்டு திட்டங்களை பெறும் பயனர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் போன் பே மூலம் எந்தவித வசதி கட்டணமும் இல்லாமல் பிரீபைடு திட்டங்களை பயனர்கள் பெறலாம்.