ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ‘பிரெண்ட்ஷிப் ஆஃப் நேஷன்ஸ்’ என்ற கலாச்சார பாரம்பரிய நீரூற்றில், இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர் இறங்கி துணி துவைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்த வெளிநாட்டினர் ஆச்சரியத்துடனும் முகம் சுளிக்கும் வகையிலும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. கலாச்சார சீரழிவு மற்றும் பொது இடங்களில் இந்தியர்களின் அநாகரிகமான செயல் என்ற ரீதியில் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
Un grupo de visitantes indios fue captado lavando ropa en la fuente “Amistad de los Pueblos” en Moscú, un sitio considerado patrimonio cultural. Según relataron, aseguraron que esta práctica es algo normal en su país. pic.twitter.com/g8MFlGY1rm
— Zona Mixta (@MixtaZona21) May 11, 2026
“>
இருப்பினும், இந்த வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ‘லைட்ஹவுஸ் ஜர்னலிசம்’ மூலம் நடத்தப்பட்ட உண்மைச் சோதனையில் இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது அம்பலமாகியுள்ளது. உண்மையில் இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முற்றிலும் போலியாக உருவாக்கப்பட்டது என்பதும், ஏஐ உள்ளடக்கக் கண்டறிதல் சோதனையில் இது 99.9% ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
