பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த ரோஸி (32) என்பவர், தனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், நில உரிமையாளர் சத்னம் சிங் மற்றும் அவரது மனைவி புஷ்பா ஆகியோரின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். ரோஸி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சத்னம், அதைக் காட்டி தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரோஸி, தற்கொலைக்கு முன்னதாக தனது மொபைல் போனில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், தனது மரணத்திற்கு நில உரிமையாளரே காரணம் என நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தை பாலா ராம் அளித்த புகாரின் பேரில் திப்பா போலீசார் சத்னம் மற்றும் புஷ்பா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
