பெங்களூரு காவல்பைரசந்திரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றி வரும் பெண், தனது மாமனார் மீது அதிர்ச்சிகரமான பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பள்ளியின் நிறுவனராகவும் இருக்கும் தனது மாமனார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலும், பள்ளி அலுவலகம் மற்றும் லிஃப்ட் போன்ற இடங்களிலும் தமக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தனது உடல் தோற்றம் குறித்து ஆபாசமாக கடிதங்கள் எழுதி அதை வாசித்துக் காட்டியும், ஆடையைக் கலைக்க முயன்றும் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது கணவரிடம் முறையிட்டும் பலன் கிடைக்காத நிலையில், தற்போது ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
