தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த மனு சாதாரண நடைமுறை வழக்குகளின் வரிையில்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை (கொளத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரியது) அவசரமாக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம்,
• இந்த மனு வழக்கமான விசாரணையின் போது மட்டுமே விசாரணைக்கு… https://t.co/TaSdmljiuS
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 25, 2026
“>
கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டு, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை ரத்து செய்யக் கோரியும், தன்னை வெற்றிபெற்றவராக அறிவிக்கக் கோரியும் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
