மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மதுரை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஆகியவை அரசு ராஜாஜி மருத்துவமனை பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தீவிர சிகிச்சை பிரிவுக்கு 44 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 86 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து இந்த நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ள நிலையில், இப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், ராஜாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மக்களுக்காக நாங்கள் நடத்திய பல்லாண்டு முயற்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
மதுரை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் மதுரை ஆட்சியரக வளாகம் (பழைய இராமநாதபுரம் ஆட்சியரகம்) ஆகிய இரண்டு இடங்களும் அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 44… pic.twitter.com/7GFMTxpgc3
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 25, 2026
“>
சுகாதாரத்துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த வளர்ச்சிப் பணிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
