கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் வகையிலான ஒரு அசாத்திய அதிரடி சாதனையை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி படைத்து ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் (ODI) தொடரின் இறுதிப்போட்டியில் களம் இறங்கிய அவர், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துள்ளார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 11 பந்துகளிலேயே அரைசதம் (Half-century) அடித்து ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் தன்வசமாக்கியுள்ளார்.
இறுதிப்போட்டி என்ற பதற்றம் ஏதுமில்லாமல், இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பந்தாடிய இவருடைய இந்த அசுரத்தனமான பேட்டிங் மற்றும் அசாத்திய சாதனை தற்போது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு செம வைரலாகி வருகிறது.
